Skip to main content

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் சேரன் போட்ட முதல் ட்வீட்!

Published on 24/09/2019 | Edited on 25/09/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். 
 

cheran

 


இந்த நிலையில், நாடகம் மற்றும் சினிமா துறையில் எழுத்தாளராக இருக்கும் பத்மாவதி, சேரன் ஒரு நல்ல தந்தை என்றும் அனைவருக்கும் முன்னோடியாக இருக்கிறார் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சேரன், நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். அதில் "தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி.. நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் சேரனுக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்