Skip to main content

"தனி நீதிபதி உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலை"- எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

"ADMK is unable to function due to the order of a single judge" - Edappadi Palaniswami's argument!

 

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (25/08/2022) காலை 11.00 மணிக்கு தொடங்கியது. 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. 

 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் விஜய் நாராயணன், சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், நர்பதா சம்பல் ஆகியோர் ஆஜராகினர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் குமார் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன், யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார். அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவைக் கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தனி நீதிபதி உத்தரவு உள்ளது. தனி ஒரு நபர் பயனடையும் வகையில்தான் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வால் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது என வாதிட்டார்.

 

தொடர்ந்து, வழக்கு விசாரணை தொடர்பான வாதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு முன் வைத்து வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்