Skip to main content

பாஜகவுக்கு இவ்வளவா? அதிமுக சீனியர்கள் எதிர்ப்பு!

Published on 25/01/2019 | Edited on 26/01/2019
admk-bjp



அதிமுக கூட்டணியில் 50 - 50 என்ற அளவுகோலில் தான் பாஜக அதிமுகவை நெருக்கி வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து பாஜகவிடம்...

'தமிழ்நாட்டில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிடமே தேசிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. பாண்டிச்சேரி உள்பட மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 18, திமுகவுக்கு 22 என்று தொகுதி பங்கீடு இருந்துள்ளது. எங்களுக்கு, பாஜகவுக்கு சரிபாதி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் பாஜகவுக்கு, அதிமுக அடிமை என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வதுபோல் ஆகிவிடக்கூடாது. ஆகவேதான் உங்களுக்கு 18 எங்களுக்கு 22 இது அரசியல் ரீதியாக விவாதப்பொருள் ஆனாலும் கடந்த காலத்தில் திமுக காங்கிரஸ் இப்படித்தான் பிரித்துள்ளது என நாங்கள் கூறிக்கொள்வோம். இதில் தேமுதிகவுக்கு நீங்களும் பாமகவுக்கு நாங்களும் என தொகுதி ஒதுக்கிக்கொள்கிறோம்'

என கூறியிருக்கிறார்கள்.

இருப்பினும் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவது ஏற்புடையது இல்லை, ஒன்றை இலக்கத்தில்தான் கொடுக்க வேண்டும் என அதிமுகவின் சீனியர்கள் மட்டத்தில் குரல் ஒலிப்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை பாஜகவிடம் கொடுத்த சீட் எண்ணிக்கையில் இருந்து வாங்கிவிடுவது என பேச்சுவார்த்தை குழு குரல் எழுப்புபவர்களை அமைதிப்படுத்தி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்