Skip to main content

திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.பி.சீட்டுக்கு விருப்ப மனு கொடுத்த ஆளும் கட்சியினர்!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

ad


பாராளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதத்தில் வர இருப்பதால் தமிழகத்தில் முதன்முதலில் ஆளும்கட்சியான அதிமுக பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுபவர்களுக்கு விருப்ப மனு கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.    சென்னையில் உள்ள அதிமுக தலைமை  அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுபவர்களுக்கு என்று விருப்ப மனு  கொடுக்கப்பட்டு வருகிறது.   

 

ad


இந்த விருப்ப மனுக்களை முதன்முதலில் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடியும்,  கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் முதன் முதலில் தேர்தலில் போட்டி போடும் கட்சிக்காரர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றனர்.   அதன்பின் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருக்கும் மாவட்டம்,  நகரம்,  ஒன்றிய செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்கள் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அதிமுக மாவட்ட  செயலாளரும். திண்டுக்கல் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மருதராஜ் மற்றும் மாநில ஜெ பேரவை துணைச் செயலாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கண்ணன். திண்டுக்கல் அபிராமி சொசைட்டியின் முன்னாள் தலைவரான பாரதி முருகன்,  முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணி.

 

திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன்,  நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பபன். ஒட்டன்சத்திரம் முன்னாள் வாரிய தலைவரும் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பாலசுப்பிரமணி உள்பட 15 ஒன்றிய செயலாளர்களும் ஒட்டன்சத்திரம் பழநி கொடைக்கானல் நகர செயலாளர்கள் என ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 பேர் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு( வேடசெந்தூர் தொகுதி நீங்களாக) தலைமையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து சார்பணியை சேர்ந்த நிர்வாகிகளும் கூடிய விரைவில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு விருப்ப மனு  கட்ட தயாராகி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்