Skip to main content

''விடமாட்டோம்... என்ன கருவேப்பிலையா கொத்தமல்லியா'' - நடிகை ராதிகா பேச்சு  

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

actress radhika sarathkumar speech

 

இன்று (03.03.2021) தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டை என்ற இடத்தில் சமகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமகவின் தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். மேலும் கூட்டத்தில் பேசிய சமகவின் துணை பொதுச்செயலாளர் விவேகானந்தன், கூட்ட மேடையில் “சமக சார்பில் ராதிகா வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார்” என அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பொதுக்குழு மேடையில் பேசிய ராதிகா சரத்குமார், ''தப்பு என்று சொன்னால் எதிர்க்கக்கூடிய தலைவர் சரத்குமார் என்று சொல்வார்கள். நான் இன்று சொல்கிறேன் அவருக்குப் பயம் கிடையாது. அவர் ஒரே ஒரு விஷயத்திற்குத்தான் கட்டுப்படுவார். அது அன்பு. அன்புக்கு மட்டும்தான் அவர் கட்டுப்படுவார். நிறைய முடிவுகளை அவர் எடுத்துள்ளார். அதை விரைவில் அவரே தெரிவிப்பார். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் தேர்தலாக இருக்கும் என அடித்துச் சொல்கிறேன். விடமாட்டோம்... என்ன கருவேப்பிலையா கொத்தமல்லியா. பயம் எங்களுக்குக் கிடையாது. அன்பு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அவர் கட்டளையிட்டால் கண்டிப்பாக இந்தத் தேர்தலில் நிற்பேன். நிறைய பேர் நான் கோவில்பட்டியிலும், வேளச்சேரியிலும் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் கடவுள் (சரத்குமார்) என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை. எனக்கும் கடவுள் அவர்தானே'' என்றார்.  

 

சசிகலா சந்திப்புக்குப் பிறகு, சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதும், ஐ.ஜே.கே உடன் சேர்ந்து புதியக் கூட்டணி அறிவித்ததும், அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலை சரத்குமார் நேரில் சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்