Skip to main content

கமலுக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்கள்- நடிகர் விவேக்

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

 

kamal vivekh 01


நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் தனது நண்பர்கள் மற்றும் மூத்த அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  
 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று கமல்ஹாசன்  காலை  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்றார். அப்துல் கலாம் இல்லம் சென்ற கமல்ஹாசனை, கலாமின் குடும்பத்தினர் வரவேற்றார். கமல்ஹாசனுக்கு, அப்துல்கலாமின் அண்ணன் முத்துமீரான் மரைக்காயர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அப்துல் கலாம் சகோதரரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார்.
 

இந்த நிலையில், நடிகர் விவேக் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று முதல் புதிய தளத்தில் வளம் சேர்க்க களம் காணப் புறப்படும் கமலுக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என விவேக் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்