Skip to main content

ஜீரோவை மறைக்க ஹீரோவை கட்சியில் சேர்த்த மாஜி!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

hj

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள 7 வது வார்டு வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எல்லோராலும் கவனிக்கப்பட்ட வார்டாக இருந்தது. காரணம் ஒவ்வொரு ஓட்டின் விலையும் ரொம்ப அதிகம். தேர்தல் முடிவு வெளியான போது இன்னும் பரபரப்பாகவும் ஒட்டு மொத்த மீடியாக்களிலும் பேசப்பட்ட வார்டாக மாறியது. இதற்கு காரணம் இந்த வார்டில் அதிமுக ந.செ அப்துல்லாவின் தம்பி இப்ராம்ஷா வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் வாங்கிய ஜீரோ ஓட்டு தான். தன் ஓட்டை கூட தன் மருமகனான திமுக வேட்பாளர் பரூக் வெற்றிக்காக கொடுத்துவிட்ட வள்ளல் தான் அதிமுக வேட்பாளர் இப்ராம்ஷா.

 

அதாவது, இந்த வார்டில் வாக்காளர்களை அதிகமாக கவனித்த சுயேட்சை வேட்பாளர் பிருத்விராஜ் 175 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஹீரோ ஆனார். அதிமுக வேட்பாளர் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தும் திமுக வேட்பாளர் பரூர் 149 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் கரீம் 135 வாக்குகளும் பெற்றனர்.

 

kj

 

அதிமுக வேட்பாளர் ஜீரோ ஓட்டு என்று பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வேகமெடுத்த நிலையில் இதை மாற்ற நினைத்த தேர்தல் பொறுப்பாளரான அதிமுக மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, தன் கட்சி வேட்பாளரை ஜீரோவாக்கி ஹீரோவான சுயேட்சை வேட்பாளர் பிருத்விராஜை உடனே தூக்கி வந்து அதிமுக வில் இணைத்துக் கொண்டார்.

 

ஜீரோவை மறைக்க ஹீரோவை கட்சியில் இணைத்தாலும் இன்னும் ஜீரோ பேசுபொருளாகவே உள்ளது. மற்றொரு பக்கம் தமிழகத்திலேயே இல்லாத கூட்டணியாக கீரமங்கலம் பேரூராட்சியில் மட்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துதான் போட்டியிட்டது. தானே நேரடியாக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தும் கூட அதிமுக கூட்டணியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்ற ஆதங்கமும் உள்ளது மாஜியிடம்.

 

 

சார்ந்த செய்திகள்