Skip to main content

2 நாட்களாக நடந்த சோதனை; 3100 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
3100 liters liquor destroyed in raid conducted by Prohibition Police

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில்  உள்ள மாதகடப்பா, தேவராஜாபுரம், கோரிப்பள்ளம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மது விலக்கு பிரிவு ஆய்வாளர் நந்தினி தலைமையில் மது விலக்கு போலிசார் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக கள்ள சாராய ஒழிப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

அப்போது  தேவராஜபுரம் பகுதியில் கள்ள சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த சுமார் 1800 லிட்டர் கள்ள சாராய ஊறல்களையும், கோரிப்பள்ளம் பகுதியில் 1300 கள்ள சாராய ஊறல்கள் , 65 லிட்டர் கள்ள சாராயம் மேலும் கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும்  மூலப்பொருட்களையும் கண்டறிந்து அழித்தனர்.

மேலும் தப்பி ஓடிய கள்ள சாராயம் காய்ச்சும் கும்பலைச் சேர்ந்த எழுமலை தங்கம், ஆகிய 2 பேரை  போலிசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்