Skip to main content

ஈரானில் தவித்த மீனவர்கள் 21 பேர் மீண்டனர்!!

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

 

FISHER

 

 

 

ஈரானில் மீன்பிடி தொழிலுக்கு சென்று சிக்கித்தவித்துவந்த தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பி வந்தனர்.

 

 

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் மீன்பிடிக்கும் வேலைக்கு சென்றனர். ஒப்பந்த அடிப்படையில் சென்ற மீனவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காமல் உணவு தராமல் அவர்களது பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை பிடுங்கிவைத்துக்கொண்டு சித்தரவதை படுத்தியததாக தெரியவர  தங்களை தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சி எடுத்து எப்படியாவது மீட்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

 

தமிழகத்திலிருந்து சென்ற 21 மீனவர்களை மீட்க எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்த நிலையில் மத்திய அரசும் அவர்களை மீட்க பல முயற்சிகளை எடுத்துவந்தது. ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால்  21 மீனவர்களும் இன்று காலை சென்னை வந்தனர்.

சார்ந்த செய்திகள்