Skip to main content

11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

11 districts morer relaxation announced tn govt

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை- 5 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தில் மாவட்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, தேநீர் கடைகள் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். 

 

மின் பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

ஹார்டுவேர் புத்தக கடைகள் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

காலணி, பாத்திரம், அழகுசாதனப் பொருட்கள், சலவை, தையல் கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

போட்டோ/ வீடியோ, ஜெராக்ஸ் கடைகள், அச்சகங்களும் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

மிக்சி, டிவி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்கள் விற்பனை/ பழுதுபார்க்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

வாகனம்/ உதிரி பாகம் விற்பனை செய்யும் கடைகளும் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

செல்போன், கணினி, மென்பொருள் கடைகளும் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

மின்னணு சாதன உதிரி பாகங்கள் விற்பனை கடைகளும் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

சாலையோர உணவுக் கடைகள் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

இனிப்பு, காரம் விற்பனைக் கடைகள் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

இ- காமர்ஸ் மூலம் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

11 மாவட்டங்களில் அனைத்து வகையான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலூன்கள், அழகு நிலையங்கள், குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். 

 

11 மாவட்டங்களில் திறந்த வெளியில் திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு 100 நபர்கள் மட்டும் ஆர்டி- பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின் பங்கேற்கலாம். திரைப்பட தயாரிப்புக்கு பின்னர் உங்கள் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரின் அனுமதி பெற்று திரையரங்குகளில் வாரம் ஒருநாள் மட்டும் பராமரிப்பு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

பூங்கா, விளையாட்டு திடல்களில் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை நடைப்பயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

விளையாட்டு பயிற்சி குழுமங்கள் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தகவல் தொழில் நுட்பம் மற்றும் சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

வீட்டு வசதி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கலாம். 

 

ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தரும் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம். 

 

பிற தொழிற்சாலைகள் 33 பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் வரும் ஜூன் 28- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்