Skip to main content

''இதையெல்லாம் சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை.. ''-ஜெ.பி.என்-ஐ கண்டித்த ஆர்.எஸ்.பாரதி!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

 '' You don't have that part .. '' RS Bharathi condemns JPN!

 

திருப்பூரில் நேற்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசியபொழுது,''குடும்ப ஆட்சிக்கு, அரசியலுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே. திமுக கட்சி தமிழக மக்களின் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற முயல்கிறது. குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. மிகத் தெளிவான உண்மையைச் சொல்கிறேன். நீங்கள் காஷ்மீரிலிருந்து ஆரம்பித்து தென் இந்தியா வரை எடுத்துக்கொள்ளுங்கள் மேற்கு வங்கம், தென்பகுதியில் ஆந்திரா, தெலுங்கானா, சென்னை இங்கெல்லாம் குடும்ப கட்சிகளைக் காணலாம். இந்த குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாஜகதான். மன்னித்துக்கொள்ளுங்கள் தேசிய கட்சி எனகூறிக்கொள்ளும் காங்கிரஸ் கூட குடும்ப கட்சியாக மாறிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு, புதிய எண்ணங்களை உருவாக்குவதற்கு, மாற்று வழிகளை உருவாக்குவதற்கு, நாடு முன்னேறுவதற்கு, மக்களைத் துயரங்களிலிருந்து மீட்பதற்கு ஒரே மாற்றுவழி பாஜகதான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், கலாச்சார வளர்ச்சிக்கும் பாஜக என்றுமே துணைநிற்கும்''என்றார்.

 

 '' You don't have that part .. '' RS Bharathi condemns JPN!

 

இந்நிலையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் உரைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,'' நாடு முழுவதும் வாரிசு அரசியலை செய்து வரும் பாஜக திமுகவை வாரிசு அரசியல் எனக் கூறுவதற்குத் தகுதி இல்லை. இந்த பேச்சு மிகவும் கண்டனத்திற்குரியது'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்