Skip to main content

'அமைச்சர்கள் வீட்டில் பெட்டி பெட்டியா கட்டி கட்டியா எடுத்தது யாருடைய வரிப்பணம்'-உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
'Whose tax money was taken in boxes and boxes in the house of ministers'- Tamilisai question to Udhayanidhi

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி,' நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம்' என பேசி இருந்தார்.

இந்த பேச்சுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு பதிலளித்து பேசுகையில், ''அவருடைய தாத்தா திட்டுவதென்றால் கூட அழகு தமிழில் திட்டுவார். நீங்கள் கலைஞர் உரிமைத் தொகை கொடுக்கும் பொழுது நாங்கள் கேட்கலாம் அல்லவா? இது என்ன உங்கள் வீட்டு காசா என்று கேட்கலாமா? பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்று ஆரம்பித்தார்கள். அதற்கு பிரதமரா காசு கொடுக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

அப்ப கலைஞர் உரிமைத்தொகை என்றால் கலைஞர் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறார்கள். இந்த மாதிரி வார்த்தைகளை முதலில் அடக்கவில்லை என்றால் உதயநிதியை ஒரு எதிர்மறை தலைவராக தான் இந்தியா கூட்டணியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்கொள்ளப் போகிறது'' என்றார். இதற்கு பதில் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'தெலுங்கானா ஆளுநரா அவரை தமிழ்நாட்டில் வந்து சொல்ல சொல்லுங்க இதெல்லாம்' என்ன பதில் கொடுத்திருந்தார்.

'Whose tax money was taken in boxes and boxes in the house of ministers'- Tamilisai question to Udhayanidhi

இந்நிலையில் தற்காப்பு கலை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் உதயநிதியின் பதில் குறித்த கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், 'தம்பி, மரியாதைக்குரிய மாநில அமைச்சர் உதயநிதி மக்கள் வரிப்பணத்தை பற்றி பேசுகிறார். நான் ஒரே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களின் வரிப்பணத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நீங்கள் இன்று இலாகா இல்லாத ஒரு மந்திரியை வைத்திருக்கிறீர்கள். மக்கள் வரிப்பணத்தை பற்றி இவ்வளவு கவலைப்படுகிறீர்கள். எந்த வரிப்பணத்தில் நீங்கள் இலாகா இல்லாத மந்திரியை வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள பல அமைச்சர்கள் வீட்டில் பெட்டி பெட்டியா கட்டி கட்டியா எடுத்தார்கள். அது யாருடைய வரிப்பணம். மக்களுக்கான பணமா? அல்லது உங்களுக்கான பணமா? இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள். 

நிதி அந்தந்த நேரத்தில், தகுதி வாய்ந்த நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு குரல் கொடுப்பதற்கு நானும் தயாராக இருக்கிறேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஏதோ பாராபட்சமாக நடந்து கொள்வதைப் போல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் சொல்கிறீர்கள். அப்பா வீடு என்று கேட்டால் அது பரவாயில்லை அப்பன் வீடு என்று சொன்னால் கலோக்கியலாக சொல்லலாம். ஆனால் கேட்ட முறை தவறாக எனக்கு தோன்றியது. அதற்கு நான் பதில் சொன்னேன் என்பது என்னுடைய கருத்து'' என்றார்.

சார்ந்த செய்திகள்