Skip to main content

ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்களை கண்காணிக்கும் எடப்பாடி பழனிசாமி

Published on 11/05/2019 | Edited on 11/05/2019


 

உளவுத்துறையை தமிழக ஆட்சியாளர்கள் தங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த காலத்தில் உளவுத்துறையின் 60 சதவிகித ஆற்றலை, சசிகலாவையும் அவரது உறவினர்களையும், அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் கண்காணிக்கவே பயன்படுத்தினார். 30 சதவிகிதத்தை எதிர்க்கட்சிகளை வேவு பார்க்கவும், 10 சதவீதத்தை சட்டம் ஒழுங்கை கவனிக்கவும் பயன்படுத்தினார் என்று அந்த துறையில் உள்ளவர்களே சொல்லுவார்கள். 


 

ops-eps


அதைப்போலவே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உளவுத்துறையின் பெரும்பான்மையான ஆற்றலை ஓ.பி.எஸ். உள்ளிட்ட தன் அமைச்சர்களையும் கட்சியினரையும் கண்காணிக்கப் பயன்படுத்துகிறாராம். 
 

ஜெயலலிதாவுக்கு ஒத்துழைப்பு தந்ததுபோலவே, எடப்பாடி பழனிசாமிக்கும் உளவுத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தருகிறார்களா என்று விசாரித்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருந்த உளவுத்துறை தலைவரான சத்தியமூர்த்தி, அண்மைக் காலமாக அரசுக்கு எதிரான நிலவரம் இருப்பதாக ரிப்போர்ட் கொடுத்திருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், சத்தியமூர்த்திக்கும் விரிசல் ஏற்பட்டு, இதில் அப்செட்டான சத்தியமூர்த்தி விடுமுறையில் சென்றிருக்கிறாராம். 

 

இந்தநிலையில் சிபிசிஐடியின் டிஜிபியான ஜாபர் சேட், அறிவிக்கப்படாத உளவுத்துறைத் தலைவராகவே செயல்படுகிறாராம். மேலும் அவர் உத்தரவின் பேரில் இந்த இடைத்தேர்தலில் உளவுத்துறை, எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா வகையிலும் சேவை செய்கிறதாம். 

 

 

 

சார்ந்த செய்திகள்