Skip to main content

கமலுக்கு திட்டு, ரஜினிக்கு செல்ஃபி - வைகோ!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018
vaiko, kamal, rajini


கமல்,  ரஜினி இருவருமே இப்போது அரசியலில் இறங்கிவிட்டனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலை உடைக்கப்படும் என ஹெச். ராஜா கூறியதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது கமல்  "அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம்." என பதிவிட்டிருந்தார். அடுத்த சில தினங்களில் வைகோவிடம் இதுபற்றி கேட்டபோது, "கமல் மைண்ட் யுவர் பிசினஸ். நீங்க ஐந்து நாட்களாகதான் அரசியல்ல இருக்கீங்க, நான் 54 வருசமா அரசியலில் இருக்கிறேன். எனக்கு தெரியும் எப்படி பேசணும்னு" என்று கூறினார். இத்தனைக்கும் கமல் இவர்களுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க. வை எதிர்த்தும்தான் ட்வீட் போட்டிருந்தார். மேலும் அவர் திராவிட அரசியலையும், பெரியார் வழியையுமே முன்னெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஜினி அதற்கு நேர் எதிர் அரசியலுக்கு வருமுன் ஆன்மீக அரசியல் என்றார். அதன்பின் எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி என்றார். அவர் திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஆன்மீக அரசியலை எடுத்தார். நேற்று நடிகர் பார்த்திபன் மகள் திருமணத்திற்கு சென்ற வைகோ, அங்கு ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். 

சார்ந்த செய்திகள்