Skip to main content

“60 தொகுதிகளில் வெற்றி; இதில் எவ்வித மாற்றமும் இல்லை” - பாஜக தலைவர் அண்ணாமலை

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

"There is no change in 60 constituencies" BJP leader Annamalai

 

தமிழகத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளில் திராவிட கட்சிகளே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்ன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

சென்னை தியாகராய நகரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற புதிய அரசியல் தலைவர்களை உருவாக்கும் பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். 

 

அப்போது பேசிய அவர், “குஜராத்தில் மோடி, பாஜகவின் கட்சிப் பொறுப்பிற்கு வந்த போது பாஜகவிற்கு குஜராத்தில் 2.5% வாக்குகளே இருந்தது. தற்போது நாடு முழுவதும் பாஜகவிற்கு 40% வாக்குகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருக்கிறது. இதில் 60 முதல் 64 தொகுதிகளில் மாற்றம் இருக்காது. அதில் திமுக வெற்றி பெறும் அல்லது அதிமுக வெற்றி பெறும். எனக்குத் தெரியாது. ஒரு வேளை நீங்கள் திராவிட கட்சிகளில் சேர்ந்து பொறுப்புகளை வகித்து அந்த 64 தொகுதிகளில் நீங்கள் போட்டியிடும் சூழல் வந்தால் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி.

 

நல்ல தலைவர்களால் தான் கட்சியை வளர்க்க முடியும். சாதாரண நபர்கள் செய்யும் குற்றத்தை மக்கள் பெரிது படுத்த மாட்டார்கள். ஆனால், தலைவர்கள், அரசியலில் இருப்பவர்கள் தவறு செய்தால் பொது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்