Skip to main content

கவர்னர் ரெடி பண்ணிய சீக்ரெட் ரிப்போர்ட்... டென்ஷனில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

admk


சமீபத்தில் கவர்னரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்தது தொடர்பாக விசாரித்தபோது, கரோனா நிவாரணப் பணிகள் பற்றி ஆராய்வதற்கு, தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மத்தியக் குழு, இங்கே நிலைமை ஒன்றும் சரியில்லை என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கின்றனர். அதற்கு ஏற்ப, தமிழகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்வதைப் பார்த்து எரிச்சலான மத்திய அரசு, தமிழக கவர்னர் பன்வாரிலாலைத் தொடர்பு கொண்டு, நிலவரத்தை விசாரிக்கச் சொல்லியிருக்கின்றனர். 


இந்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், டெல்லிக்கு அனுப்புவதற்காக சீக்ரெட் ரிப்போர்ட்டை ரெடியாக வைத்திருப்பதாகச் சொல்கின்றனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அவர் கேபினட்டில் உள்ள 12- க்கும் மேற்பட்ட அமைச்சரவை சகாக்கள் வரை, அவர்களின் ஊழல் விவகாரங்கள் பற்றிய செய்திகள் ஆதாரப்பூர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது எடப்பாடி அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ராஜ்பவன் வட்டாரத்திலும் கோட்டை வட்டாரத்திலும் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்