Skip to main content

'இன்றைக்கு பதில் நாளை' - திமுக அறிவிப்பில் திடீர் மாற்றம்! 

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

 Sudden change in DMK announcement!

 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி என  ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (10.03.2021) அறிவிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைக்குப் பதில் நாளை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்