Skip to main content

காவல்நிலைய சாவுகள் கண்டிக்கத்தக்கவை! -ராமதாஸ்  

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
ramadoss

 

காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன. காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்!

 

நெய்வேலி காவல்நிலையச் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! என ட்வீட் செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்