Skip to main content

இது நியாயமா? ஏன் இப்படி ஏடாகூடம் பண்றீங்க... ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாமக... கடுப்பில் ராமதாஸ்!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று எடப்பாடி அரசு போட்ட அவசர சட்டத்தால், கூட்டணிக் கட்சிகளுக்கே அதிருப்தி நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் இந்த மூன்று மேயர் சீட்டையும் வாங்கிட வேண்டும் என்று உறுதியாக இருந்தது. மறைமுகத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதில் பா.ஜ.க. கடும் கொந்தளிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோல் தங்களுக்கு சாதகமான மேயர் தொகுதிகளைக் குறிவைத்திருந்த பா.ம.க.வும் பலத்த அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எடப்பாடி அரசின் இந்த மறைமுகத் தேர்தல் குறித்த அறிவிப்பு வந்ததுமே, முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்ட பா.ம.க. நிறுவனர் ராம்தாஸ், இது நியாயமா? ஏன் இப்படி ஏடாகூடம் பண்றீங்கன்னு தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருப்பதாக சொல்கின்றனர். இதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே கடுப்பில்தான் இருப்பதாக சொல்கின்றனர்.   
 

pmk



மேலும் அ.தி.மு.க. மேலே தமிழக பா.ஜ.க.வினருக்கு அதிருப்தி இருந்தாலும், ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் துணையில்லாமல் இங்கே எதையும் செய்ய முடியாது என்பதால், தி.மு.க பக்கமும் பார்வை திரும்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியும் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் தமிழகம் வரவழைத்து, அவர்களோடு மு.க.ஸ்டாலினை சந்திக்க வைக்க முடியுமா? என்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எந்த அளவுக்கு அது சாத்தியம் என்று தெரியவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்