கரோனா வைரஸ் தடுப்புக்கான முயற்சிகளின் முக்கியப் பகுதியாக மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மக்களைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கரோனா விழிப்புணர்வு குறித்தும், சுய ஊரடங்கிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. பின்பு நடிகர் ரஜினி பதிவிட்ட வீடியோவை ட்விட்டரின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகக் கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கியது.
இந்த நிலையில் ரஜினியின் இந்த வீடியோ பதிவை ட்விட்டர் தரப்பு நீக்க என்ன காரணமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வந்தனர். இதனையடுத்து ரஜினி வீடியோவை டெலீட் செய்ய பிரசாந்த் கிஷோர் தான் காரணம் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர். ரஜினி வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்வையிடுவதால் பிரசாந்த் கிஷோர் ஐடியா மூலம் அந்த வீடியோவை நீக்க முயற்சி செய்திருக்கலாம் என்று ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோர் டீம் தான் காரணம் என்று ஒரு சில ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர்.