Skip to main content

பாஜகவிற்கு ஆதரவு தரும் குமாரசாமி?அதிர்ச்சியில் காங்கிரஸ்!கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்தார். இந்நிலையில் பாஜக கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களுருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 
 

karnataka



இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக, அம்மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து முதல்வராக எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம், பாஜகவிற்கு ஆதரவு அளிக்க போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் ஜி.டி. தேவ கவுடா பேசும் போது, “எங்கள் கட்சியின் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர். 


மீதமுள்ளவர்கள், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு கட்சியை வளர்க்க பரிந்துரைத்துள்ளனர்” என்றார். இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தான். அவர் நினைத்து இருந்தால் அவர்களிடம் பேசி சமரசம் செய்திருக்க முடியும். ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்தவித முயற்சியும் பெரிய அளவு எடுக்கவில்லை என்று குமாரசாமி தரப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பாகி உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்