Skip to main content

“காமராஜர் பெயரை வைத்து பிச்சை எடுக்கிறார்கள்” - காங்கிரசை கடுமையாக விமர்சித்த குஷ்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Khushbu, who criticized the Congress for They beg in the name of Kamaraj

வேலூர் மாவட்டம், தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் சுமார் 27,000 சதுர அடி நிலப்பரப்பில் ஏ.சி.எஸ் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் இலவச கணினி பயிற்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர். சி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘பெருவாரியான தொகுதிகளில் ஜெயிக்கும் என்று சொல்லும் பாஜக ஏன் கூட்டணிக்காக தேடுகிறார்கள் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதலளித்த குஷ்பு, “நாங்கதான் ஜெயிக்கப் போகிறோமே. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்துள்ளார்கள். உங்கள் கட்சியில் பிரசாதம் செய்வதற்கு யாரும் இல்லை. கமல்ஹாசன் போல ஒரு முகம் உங்களுக்கு பிரச்சாரம் செய்ய தேவை. அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறாரா? முதலமைச்சர் போனாலும் கூட்டம் வராது. கூட்டத்திற்காக கமல்ஹாசன் வேண்டுமா முதலமைச்சருக்கு. கதவு திறந்தே உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்கள். அதற்குக் காரணம் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கை. கடந்த 65 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்ய முடியாததை கடந்த 10 வருடத்தில் மோடி செய்து காண்பித்துள்ளார். இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம். தமிழகத்தில் 1967க்கு பிறகு ஏன் காங்கிரஸ் சொந்த காலில் நிற்க முடியவில்லை. காமராஜர் பெயரை வைத்து காங்கிரஸ் பிச்சை எடுக்கிறார்கள். தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டுடன் சேர்ந்து காங்கிரஸ் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனியாக நின்று இருக்கலாமே?. 

அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளார்கள். ஜாபர் சாதிக் யாருடைய ஆள். திராவிட முன்னேற்றக் கழகம் தானே. ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் வேலை முடிந்துவிட்டதா. இப்போதானே கைதாகி உள்ளார். தொடர்புடையவர்களின் பெயரெல்லாம் இனிமேல் தானே வரும். வரட்டும் பிறகு பேசுவோம். 

பிரதமர் மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க.வினருக்கு பயம். பிரதமர் மோடி வரும்போது தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. இந்தி தெரியாது போடா என்று சொல்லும் அளவுக்கு மோடி வருகிறார் அல்லவா. வந்துவிட்டு போகட்டுமே. உங்களுக்கு என்ன வந்தது. பயத்தில் தான் இது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் போய் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன். 

வேலூர் தொகுதிக்கான வெற்றிச் சின்னமாகிய ஏ.சி.எஸ் என் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம் தான் வெற்றி பெறப் போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புரட்சித்தலைவர் தொடங்கி, புரட்சித்தலைவி, கலைஞர், கமல்ஹாசன் என விஜய் வரை அனைவருக்கும் மக்கள் மத்தியில் அனைவருக்கும் செல்வாக்கு மற்றும் அன்பு இருந்தது.

உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் ஹீரோவான பிறகு தானே அரசியலுக்கு வந்தார். ஏன் முதலமைச்சரும் நடிகனாக வேண்டுமென்று தானே ஆசைப்பட்டார். அதற்குப் பிறகுதானே அரசியலுக்கு வந்தார்” என்று பேசினார். இதையடுத்து எம்.ஜி.ஆரின் இடத்தை விஜய் நிரப்புவாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “புதிதாக வந்துள்ளார், ஏன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். முயற்சி செய்து வரட்டும், 2026ஐ பற்றி 2026 இல் பேசுவோம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.