Skip to main content

"அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை" - கார்த்திக் சிதம்பரம் எம்பி 

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

karthik chidambaram mp talks about erode by election 

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

 

இந்நிலையில் ஈரோட்டில் 11ம் தேதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க வந்துள்ளேன். சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெறுவார். ஈவிகேஎஸ். இளங்கோவன் இந்த ஊரைச் சேர்ந்தவர். நன்கு பிரபலமானவர் அவருக்கு அறிமுகம் தேவையில்லை. திமுக தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு மக்கள் வாக்கு அளிப்பார்கள். தமிழ்நாட்டில் நச்சு அரசியல் வந்துவிடக் கூடாது. அதற்காக இளங்கோவனை வெற்றி பெற வைக்க வேண்டும். 77 வேட்பாளர்கள் 5 பெட்டி வைக்கும் நிலை உள்ளது. ப.சிதம்பரம் பிப்ரவரி 18 மற்றும் 19 தேதிகளில் பரப்புரைக்கு வருவார்.

 

எங்களை விட பலமான கட்சி திமுக என்பதை ஒப்புக் கொள்கிறேன். எங்களுக்கும் ஒரு வாக்கு வங்கி உள்ளது. செயற்கையாக ஒன்று சேர்க்கப்பட்ட கட்சி தான் அதிமுக. அதிமுக வைக்கும் விமர்சனங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவிற்கு வாக்குறுதி நிறைவேற்ற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. நிச்சயம் நிறைவேற்றுவார்கள். கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்க தான் செய்யும். நாங்களும் திராவிட கட்சிகளும் எல்லா விதத்திலும் ஒன்றுபடுவதில்லை. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பை வரவேற்று நான் கருத்து கூறினேன். எனது தந்தை அவரது கருத்தை கூறினார். இருவரும் ஒரே கருத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது தந்தைக்கும், எனக்கும் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. நான் எனது சிந்தனையை கூறுகிறேன்.

 

இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் 75 சதவீதம் பேர் விசாரணை கைதிகளாக பல ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை சிறப்பு நீதிபதிகளை நியமித்து தகுதியானவர்களை உடனே விடுவிக்க வேண்டும். பொதுவாக சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்படுபவர்கள் 15 நாட்கள் காவலில் வைக்கப்படுவர். குற்றச்சாட்டு உறுதியானால் மட்டுமே தொடர்ந்து சிறையில் வைப்பார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் உட்பட 75 சதவீத சிறைக் கைதிகள் விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்.

 

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பங்கு சந்தை ஊழல் நடைபெற்றது குறித்து கூட்டு பாராளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அதேபோன்று தற்போது அதானி நிறுவன குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் வங்கி, எல் ஐ சி போன்றவை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. பிரதமர் மோடி காங்கிரஸ் பற்றி கருத்து கூறும்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்யும் என்கிறார். கேம்பிரிட்ஜ் ஹார்வர்டு போன்றவையும் ஆராய்ச்சி செய்யட்டும். இது நடைமுறைதான். தமிழக முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடு குறித்து வருத்தம் தெரிவித்து பேசி உள்ளார். அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஏனென்றால் நான் திமுக செய்தி தொடர்பாளர் அல்ல. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல். எனவே ஏராளமான அமைச்சர்கள் ஆர்வம் காரணமாக இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து எந்த கருத்து வேற்றுமையும் இல்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.