Skip to main content

"அவர் உண்டு கொழுத்த நண்டு.." - ஜெயக்குமார் அட்டாக்!

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

jeyakumar

 

 

போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை முடிக்காததை கண்டித்து அண்ணா தொழிற்சங்க பேரவையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி. தினகரன் குறித்த கேள்விக்கு ' எங்கள் இயக்கத்தைப் பற்றிப் பேச எந்த முகாந்திரமும் இல்லை' எனச் சாடியுள்ளார்.

 
மேலும் கூறிய அவர் "எங்களால் தான் அதிமுக கட்சி தோல்வியுற்றது என அவரே கூறுகிறார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்தால் இரட்டை இலை உப்பைத் தின்று உண்டு  கொழுத்த நண்டு அண்ணா திமுகவை  விமர்சனம் பண்ணுவது என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.  மேலும் கட்சி இன்று எழுச்சியுடன் காணப்படுகிறது. இந்த எழுச்சியை பொறுக்காமல் என்ன பசப்பு வார்த்தையைக் கூறினாலும் அண்ணா திமுகவை எதிர்த்து நின்றவர்களைத் தொண்டர்கள் இன்னும் மறக்க வில்லை. எனவே என்ன செய்தாலும் எடுபடாது" என்றார்.

 

சார்ந்த செய்திகள்