Skip to main content

''நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இல்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது''-கமல்ஹாசன் பேட்டி

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. 

 

இன்று (27/2/2021) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய கமல்ஹாசன் ''இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு.. அது இல்லை என்பது அறிவிப்பின் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. இன்னும் 36 நாட்களே இருக்கிறது. அதற்கு முன்பே நாங்கள் ஆயத்தமாக இருந்ததால் அடுத்தகட்ட வேளைகளில் இறங்கியுள்ளோம். மூத்த அரசியலாளர் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடவும் அவர் சம்மதித்திருக்கிறார்'' என்றார். அதேபோல் சட்டபஞ்சயாத்து இயக்கம் இந்தமுறை மக்கள் நீதி மய்யத்துடன் சேர்ந்து பயணிக்கும் எனவும் கமல்ஹாசன் அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்