Skip to main content

லண்டனில் ஆடம்பர ஹோட்டல் வாங்கிய தினகரன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல்: நமது அம்மா கடும் விமர்சனம்

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா'வில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையான விமர்சனம் செய்து கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.


  admk - namadhuamma




அதில், 1990களிலேயே டிடிவி தினகரன் லண்டனில் ரூபாய் 1000 கோடிக்கு ஆடம்பர ஹோட்டல் வாங்கினார். இதுதொடர்பான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில், டிடிவி தினரகன் திமுகவுடன் பேரம் பேசி தன் மீதான வழக்கை திரும்பப் பெற முயற்சித்தார். டிடிவி தினகரன்தான் திமுகவின் ஸ்லீப்பர் செல். அவரே செந்தில் பாலாஜி, கலைராஜனை திமுகவுக்கு அனுப்பினார். இது மக்களுக்கும் தெரிந்துவிட்டது. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உண்ணாமல், உறங்காமல் உழைத்து வெற்றி பெற்ற நிலையில் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை டிடிவி தினகரன் பதராக்கிவிட்டார். குக்கர் சின்னத்திற்கு வாக்களித்தால் ரூபாய் 10 ஆயிரம் தருவதாக் கூறி ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்றி ஹவாலா அரசியலை முன்னெடுத்தார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


 

சார்ந்த செய்திகள்