Skip to main content

"ஏன் சமைச்சு ஊட்டி விடலாமே"... ரஜினி பற்றி கருத்து கூறிய கௌதமனை கடுமையாக விமர்சித்த எஸ்.வி.சேகர்!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

கரோனா வைரஸ் தடுப்புக்கான முயற்சிகளின் முக்கியப் பகுதியாக மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மக்களைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்தால் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ கோரியிருந்தார் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள சினிமா ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நிதி அளித்து வருகின்றனர். அதே போல் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ ஃபெப்சி அமைப்புக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் ரஜினிகாந்த். 

  rajini



இந்த நிலையில் நடிகர் 'ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்திருக்கலாம்' என்று இயக்குனர் கௌதமன் கருத்து கூறினார். இயக்குனர் கௌதமன் கூறிய கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை பொருட்கள் கொடுத்து இருக்கலாம்" - முன்னாள் இயக்குனர் கெளதமன் ஆதங்கம். ;) ஏன் சமைச்சு ஊட்டி விடலாமே. ரஜினியை பத்தி பேசியே பிரபலமாயிடலாம்னு உங்க லட்சியம் கடைசிவரை நிறைவேராது" என்று விமர்சனம் செய்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்