Skip to main content

'ஈரோட்டில் காங்கிரஸ்தான் நிற்கும்' - கே.எஸ். அழகிரி உறுதி

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

 'Congress will stand in Erode' - KS Alagiri assured

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு நேற்று முதல் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களை மறைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் இத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக அதிமுக கூட்டணிக் கட்சிகளும் திமுக கூட்டணிக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், ''ஈரோட்டில் காங்கிரஸ்தான் நிற்கும். ஏனென்றால் அது எங்களுடைய தொகுதி. நாங்கள் நின்ற தொகுதி வென்ற தொகுதி. நாங்கள் எங்களது தோழமைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பொதுவுடைமை கட்சிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளிட்ட அனைவரிடமும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டு இருக்கிறோம். ஏறக்குறைய இன்று மாலை இவர்களை சந்தித்து நாங்கள் பேசுவோம். எனவே காங்கிரஸ்தான் அங்கு நிற்கும். நீங்கள் எல்லாம் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்'' என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்