விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான், தன்னுடைய உரையில் 'ராஜீவ்காந்தி அவர்களை நாங்கள் தான் கொன்று புதைத்தோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையொட்டி, சீமானை உடனடியாக கைது செய்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புலன் விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டத்துறை இணை தலைவர் எஸ்.கே. நவாஸ், கிரின்வேஸ் சாலையில் உள்ள மத்திய புலனாய்வுத்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள பல்துறை ஒழுங்கு கண்காணிப்பு ஆணையத்தில் ஒரு புகார் மனுவை கடந்த 14.10.2019 அன்று அளித்துள்ளார்.
இந்தநிலையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் சீமானை "முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி பேசியதை திரும்பபெறு என எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதற்கு பதிலாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் 1,50,000 ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்க காரணமாக இருந்த சீமான் பேசியது சரியே என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் யுத்தத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.