Skip to main content

ஆறு அமைச்சர்களைக் கொண்ட மத்திய மண்டலம்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது திமுக. இன்று (07.05.2021), 33 அமைச்சர்களோடு திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.

 

மத்திய மண்டலம் என்று அழைக்கப்படும் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் மொத்தம் 23 தொகுதிகள் உள்ளன. இதில் 22 தொகுதிகளில், இந்த தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், தற்போது மத்திய மண்டலத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில், 6 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். 

 

திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, திருமயம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி, புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், பெரம்பலூர் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் என மொத்தம் 6 அமைச்சர்களை உள்ளடக்கிய பகுதியாக மத்திய மண்டலம் தற்போது பலம் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்