Skip to main content

கமிஷன் ரூபாய் வராதுன்னா அழுகையும் ஆத்திரமும் வரும்ல... எம்.பி தொகுதி நிதி குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து! 

Published on 08/04/2020 | Edited on 08/04/2020



கரோனா நிவாரணத்திற்காகப் பிரதமர் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையில் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் வகையில் தற்போது தொடங்கிய ஏப்ரல்-1 முதல் அடுத்த ஒரு வருடத்திற்குப் பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் சம்பளங்களில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் ரூ.7900 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும்" எனத் தெரிவித்தார்.

 

 

 

bjp




இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.பி தொகுதி நிதி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,"நியாயம் தானே.10-ல கமிஷன் 2 ரூபாய் வராதுன்னா,அழுகையும் ஆத்திரமும் வரத்தானே செய்யும்.ஏற்கனவே 25 கொய்யா வாங்கித் தின்னவன் இனிமே பிரியாணி எதுவும் கிடைக்காதுன்னா லூசு மாதிரி கத்தத்தானே செய்வான்" என்றும் ,"நீங்கள் நம் இந்திய உப்பு போட்ட சோத்தைத் திங்கிறவனா இருந்தா பொங்கியிருப்பீங்க. சைனா எச்சி மிச்சம் சாப்டு வாழற, ஓசி சோறு பொங்குவிங்களா?பாரதி சொன்ன கூட்டத்துல ஒருத்தன் பேசற மாதிரி இல்ல, சொந்தமா லூசு மாதிரி பேசிகிட்டே இந்தியத் துரோகியா வாழற திருட்டுத்தனம் உங்களுக்கே சொந்தம்" என்றும் எழுத்தாளர் அருணன் கூறியதற்கு விமர்சனம் செய்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்