Skip to main content

அதிமுக அரசின் தான் தோன்றித்தனமான - மூர்க்கத்தனமான அணுகுமுறை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிமுக அரசின் தான் தோன்றித்தனமான - மூர்க்கத்தனமான அணுகுமுறை மேலும் பல போராட்டக் களங்களை உருவாக்கும்” என திமுக செயல் தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

“புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்  திட்டத்தை அமல்படுத்த வேண்டும்”, “21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்க வேண்டும்”, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், நீண்டநாட்களாக நிலுவையில் இருந்துவரும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் ஆர்வம் காட்டாமல், அவர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு காவல்துறையை ஏவிவிட்டு, கைது செய்யும் அதிமுக அரசின் அராஜகப் போக்கினை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஒப்புகொண்டு விட்டு, அதை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை. அதற்காக நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்றுவரை பெறப்படவும் இல்லை. அந்தக் குழுவிற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதும் தெளிவாக்கப்படவில்லை. முன்கூட்டியே வைத்த ஊதிய மாற்றம், ஊதிய முரண்பாடுகள் தொடர்புடைய கோரிக்கைகள் எதையும் தீர்த்து வைக்காமல், காலதாமதம் செய்துவிட்டு, போராட்டம் என்றதும் திடீரென்று கமிட்டிகள் போடுவது மட்டுமே தீர்வு என்று அதிமுக அரசு கருதுவது, பொறுப்புள்ள அரசின் செயல்பாடாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை அரசே மீறுவது, சட்டத்தின் ஆட்சியை அரசே மதிக்கவில்லை எனும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பது மிகுந்த கவலையை அளிப்பதாக இருக்கிறது. 
 

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஒரு கமிட்டியை அறிவித்துள்ள அரசு, பணியில் உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் இருப்பது தான் தோன்றித்தனமான - மூர்க்கத்தனமான அணுகுமுறை என்றே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. 
 

ஆகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குவதில் கவனம் செலுத்தாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற போராட்டக் களங்கள் உருவாகும் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம்” - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

"No room for toxic politics. Let the benefited people speak our pride” - Chief Minister Stalin's statement to the volunteers

 

"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,  நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு - இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா  தொடங்கினார். கலைஞர் அதனை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே லட்சியப் பாதையில் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தருகிற இயக்கமாக, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கின்ற முனைப்புடன் செயல்பட கூடிய இயக்கமாக கட்டியமைத்தார். அவர்களுடைய பாதையில்தான் இந்த திராவிட மாடல் அரசு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் இன்றைக்கு நம்முடைய ஆட்சிமுறை மிகச் சிறப்பான வகையில் அமைந்திருப்பதை ஏடுகள் பலவும் பாராட்டுகின்றன. ஊடகங்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. அதே நேரத்தில் இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

 

பத்து ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆட்சிப் பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் நாள்தோறும் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கிறது. அந்த உழைப்பின் மூலமாக நிறைவேற்றப்படுகின்ற திட்டங்கள் கடைசி குக்கிராமம் வரை ஒவ்வொருவரையும் போய்ச் சரியாகச் சேர வேண்டும் என்ற அக்கறையுடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

 

இந்த நிலையில் நம்முடைய கழகத்தின்  நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகளிலும் அல்லது பொது நிகழ்ச்சிகளிலும் பேசக்கூடிய செய்திகளைத் திரித்து, மறைத்து, வெட்டி - ஒட்டி, மோசடி செய்து வெளியிடக்கூடிய கூட்டத்தின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை அந்த நச்சு சக்திகள் ஒரு தொடர் வேலையாகவே மேற்கொண்டு செய்து வருகின்றன.

 

"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,  நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

 

எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன.

 

அதற்காகக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

 

நம்முடைய பயணம் நெடியது. நமக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அடிக்கடி சொல்வதுபோல அவர்கள் வெற்று அகப்பைகள்.  அதனால் வேகமாகச் சுழல்கிறார்கள். நாம் கையில் ஆட்சி - மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை  வைத்திருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பு  என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

 

சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

 

எனவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். பொறுப்புடன் நடப்போம். நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவோம். அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அவை பற்றி நாம் பேசுவதைவிட, பயன்பெற்ற மக்கள் பேசுவார்கள். அவர்களே இந்த நச்சு சக்திகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். அந்தப் பொறுப்பை உணர்ந்து நம் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்” எனக் கூறினார்.

 

 

Next Story

'தாழ்ந்துகிடந்த தமிழகத்தைத் தலைநிமிர செய்த நாள்'-முதல்வர் ஸ்டாலின் உரை!

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

'The first monkey born in the world is the Tamil monkey'-Stalin's speech!

 

'தமிழ்நாடு நாள் இன்று' கொண்டாடப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது. அப்பொழுது சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என சூட்டக்கோரி தியாகி சங்கரலிங்கனார் தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்தார். மாபொசி, ஜீவா உள்ளிட்ட ஏராளமானோர் தமிழ்நாடு கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர். பலவித போராட்டங்களுக்குப் பின், அண்ணா முதல்வரான பிறகு 1967 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்தார். தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 தேதியே 'தமிழ்நாடு தினம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் நவம்பர் ஒன்றுதான் தமிழ்நாடு நாள் என சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தன.

 

'The first monkey born in the world is the Tamil monkey'-Stalin's speech!

 

தமிழக முதல்வர் அறிவிப்பின் படி ஜூலை 18 இன்று தமிழ்நாடு நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் காணொளி வாயிலாக விழாவில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,''தமிழ்,தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். உலகில் முதலில் பிறந்த குரங்கு தமிழ் குரங்குதான். தாழ்ந்துகிடந்த தமிழகத்தைத் தலைநிமிர செய்த நாள் ஜூலை18. தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல ரத்தமும்,சதையும் கொண்ட வாழ்க்கை போராட்டம். இந்தியாவின் மொத்த வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம். திமுக ஆட்சியில்தான் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடித்தந்துள்ளோம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறது'' என பேசினார்.