திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததாக கூறி அதிமுக நிர்வாகிகளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கியுள்ளனர்.

ops-eps 71

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், அதிமுகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராகவும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தைச் சேர்ந்த எம்.சி.முருகேசன் (இளவேலங்கால் ஊராட்சிக் கழகச் செயலாளர்), எம்.சாவித்திரி (அயிரவன்பட்டி கிளைக் கழகச் செயலாளர் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.