Skip to main content

தேர்தலுக்கு பின் அதிமுகவின் அத்தியாயம் மாறுகிறதா?

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் முடிவுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமில்லாமல் அணைத்து தரப்பு மக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன புதிதாக கமல் அரசியல் வருகை, தினகரன் அதிமுகவில் பிரிந்து தனி கட்சி, வழக்கத்துக்கு மாறாக இந்த தேர்தலில் நிறைய புது வாக்காளர்கள் என்று இந்த தேர்தல் களம் நிறைய மாற்றத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இந்த தேர்தல் களம் எடப்பாடி,அதிமுகவின் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய தேர்தலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்.

 

sasikala



மே 23ஆம் தேதி வரும் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வந்தால் அதிமுக ஆட்சி தொடரும் அதோடுமட்டுமில்லாமல் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்றும் தகவலும் வருகிறது. இன்னொரு தகவலும் உள்ளது என்னவென்றால் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தால் அதிமுக ஆட்சியை தொடர முடியாது மற்றும் அந்த தோல்வி தினகரன் தரப்பு பிரிக்கும் ஓட்டுகளால் நடந்தால் அதிமுகவையும், அமமுகவையும் இணைக்கும் நடவடிக்கையை அதிமுக தரப்பு எடுக்கும். அப்படி ஒரு சூழல் உருவானால் தினகரன் தரப்பு சசிகலாவை அதிமுக கட்சிக்கு தலைமை ஏற்க நிபந்தனை வைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த மாதிரியான அரசியல் மாற்றங்கள் வரும் என்று மே 23க்கு பிறகு தெரிய வரும். 
 

சார்ந்த செய்திகள்