Skip to main content

உண்மையைச் சொன்னால் கைதா? ஊடகங்களை மிரட்டும் அமைச்சர் வேலுமணி... டேமேஜாகும் அதிமுக அரசு!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கரோனா வைரஸ் பரவலுக்கு நடுவிலும் ஊடகத்துறையினர் மீது, பழி வாங்கும் நடவடிக்கையைக் கையில் எடுத்திருக்குது எடப்பாடி அரசு. இது பற்றி விசாரித்த போது, கோவையில் மின்இதழ் செய்தியாளர்கள் விசாரிக்கப்பட்டு, பதிப்பாளரைக் கைது செய்திருக்கிறது அரசு. அதாவது தமிழக அரசின் மருத்துவ உபகரணக் கொள்முதல் முறைகேடுகள் பற்றி, பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் பரவலாகக் கையில் எடுப்பதை, முதல்வர் எடப்பாடியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் அரசின் ஊழலை அம்பலப்படுத்தும் ஊடகங்களை மிரட்டும் வகையில், போலீஸ் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
 

 

 

admk


மேலும் ஊழல் விவகாரத்தோடு, அமைச்சர் வேலுமணியின் அலட்சியம் பற்றியும் வெளியிட்டது. சிங்காநல்லூர் தி.முக. எம்.எல்.ஏ.கார்த்திக் கொடுத்த ஒரு பேட்டி, அந்த ஆன்லைன் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில், அதிகாலை தொடங்கி வேலைபார்க்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பகல் 11 மணி வரை சாப்பாடு கொடுக்கவில்லை என்றும், அமைச்சர் வேலுமணி ஃபீல்டுக்கு வரவில்லை என்றும் கூறியதை சிம்ப்ளிசிட்டி வெளியிட்டிருந்தது. கடுப்பான அமைச்சர் இதை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு போய், உங்க ஆட்சியின் இமேஜை மீடியாக்கள் ஒரேயடியாக டேமேஜ் செய்கிறது என்று சொல்ல, இதைத் தொடர்ந்தே கைது நடவடிக்கை வரை காவல்துறை வேகம் காட்டியிருக்கிறது என்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து சிம்ப்ளிசிட்டி செய்தியாளர்கள் ஜெரால்டு, பாலாஜி ஆகியோரை விசாரணை என்கின்ற  பெயரில் கூட்டி சென்று பல மணிநேரம் மிரட்டியபிறகு, பதிப்பாளர் ஆண்ட்ரூ சாம்ராஜ் பாண்டியனையும் கைது செய்திருக்கிறார்கள். இந்தக் கைதுக்கு சென்னையில் இருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கைது நடவடிக்கை மூலம் ஊழலை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளை எச்சரிக்க நினைக்கிறார் எடப்பாடி என்று சொல்கின்றனர். பேரிடர் நேரத்தில் ஜனநாயகப் படுகொலை செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கண்டனங்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
 

http://onelink.to/nknapp


கரோனாவிடம் சிக்காதபடி, பத்திரிகையாளர்களும் ஊடகத் துறையினரும் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று, அரசியல்வாதிகள் பலரும் அக்கறையாக அட்வைஸ் பண்ணிய நிலையிலும், கரோனா ஊடகத்துறையினரையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் 24-ஆம் தேதி நிலவரப்படி ஏறத்தாழ 35 ஊடகத்துறையினருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை இரண்டொரு நாளில் கணிசமாக உயரலாம் என்கிற பகீர் நிலவரமும் நிலவி வருகிறது. இதனைப் பயன்படுத்தி சில ஊடகங்களும் முடங்கியிருக்கிறது. அவற்றை முடக்குவதில் வேலுமணி தனிக்கவனம் செலுத்தி வருகிறார் என்கின்றனர்.

அதாவது, அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகார்களை, அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்திய போதெல்லாம் அதை சத்தியம் தொலைக்காட்சி நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து, ஒளிபரப்பியது. அந்தக் கோபத்தில், தற்போது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் இயங்கவே கூடாது என்று, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மூலம் அதிக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்