Skip to main content

''சில பேருடைய கண்களை உறுத்தியுள்ளது... சிலருக்குத் தூக்கமே இல்லை''-ஜெயக்குமார் பேட்டி!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

jayakumar

 

அதிமுக உள்கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக சட்ட திட்டங்களின் படி விதிப்படிதான் நடைபெற்றது. இதில் எந்த விதிமீறல்களும் இல்லை. உட்கட்சித் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது சில பேருடைய கண்களை உறுத்தியுள்ளது. சிலருக்குத் தூக்கமே இல்லை. இவ்வளவு பெரிய கட்சியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்று விட்டது. இது நடக்குமா... அது நடக்குமா.. என்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பு கொண்டவர்களுக்கு ஒரு ஏமாற்றம். இந்த ஏமாற்றத்தின் அடிப்படையிலேயே அவர்களுடைய கண்கள் எல்லாம் உறுத்திக் கொண்டிருக்கிறது. சசிகலா இன்று, முதலை நீலிக்கண்ணீர் வடிப்பது போல நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அந்த நீலிக்கண்ணீர் எடுபடாத ஒன்று'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்