Skip to main content

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்ட நபர்... தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்!

Published on 11/12/2019 | Edited on 12/12/2019


மகாராஷ்டிராவில் 24 வயது வாலிபர் ஒருவர் மும்பையில் உள்ள பிரபல விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அப்போது செல்பி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தங்கியிருக்கும் ஹோட்டல் பெயரோடு பதிவு செய்துள்ளார். அந்த வாலிபரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் நான்கு இளைஞர்கள் அவரை ஹோட்டலில் வந்து சந்தித்துள்ளனர். மிகவும் நட்பாக பேசியபடி பைக்கில் ரைட் செல்லலாம் என அழைத்து சென்றுள்ளனர். பிறகு மும்பை விமான நிலையம் அருகே ஒரு காரில் அந்த வாலிபரை ஏற்றி கொண்டு சென்றவர்கள் காருக்குள் வைத்து கூட்டாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். பிறகு ஹோட்டல் அருகே இறக்கி விட்டுவிட்டு தப்பியுள்ளனர்.



இதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த வாலிபர் புகார் அளிக்கவே விரைந்து வந்த சென்று அந்த நால்வரையும் போலீஸார் பிடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதில் ஒருவர் 18 வயது நிரம்பாதவர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை சக இளைஞர்கள் கடத்தி சென்று பாலியல்ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கு சக ஆண்களே பாலியல் சொல்லை தரும் சம்பவம் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்