Skip to main content

யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கம்! 

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

Yogi Adityanath's helicopter makes an emergency landing!

 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று (25/06/2022) வாரணாசிக்கு சென்றிருந்தார். வாரணாசியில் அரசு நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், இன்று (26/06/2022) காலை ஹெலிகாப்டர் மூலம் லக்னோ சென்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது ஹெலிகாப்டர் மீது பறவை ஒன்று மோதியது. 

 

இதனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அங்கிருந்து சாலை மார்க்கமாக விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். 

 

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்