Skip to main content

பிரெட், பிஸ்கட், ரொட்டி, பரோட்டா விலை உயருமா? 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Will the prices of bread, biscuits, bread and barota go up?

 

கோதுமைக்கான வெளிச்சந்தை விற்பனை விலையை மத்திய அரசு இன்னும் அறிவிக்காததால் அடுத்த மாதம் முதல் பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட கோதுமை, மைதா உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

 

விளைப்பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவைக்கேற்ப இந்திய உணவுக் கழகம், அவ்வப்போது, வெளிச்சந்தை விலையை நிர்ணயம் செய்கிறது. ஏற்கனவே, பணவீக்கம் ஒருபுறம் அச்சுறுத்தி வருவதாகக் கூறும் தயாரிப்பு நிறுவனங்கள், கோதுமைக்கான வெளிச்சந்தை விலையை மத்திய அரசு அறிவிக்காததால், பிரெட், பிஸ்கட், ரொட்டி, பரோட்டா உள்ளிட்டவற்றின் விலையை அடுத்தமாதம் முதல் உயர்த்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. 

 

இது தவிர, ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது, பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ள சூழலில், விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்