Skip to main content

கணவனை முதுகில் சுமந்து வந்த மனைவி! 

Published on 05/04/2018 | Edited on 05/04/2018

 

The wife who carried her husband on her back

உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவில்  கணவனுக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக மாவட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு இடது கால் இழந்த கணவனை தன் முதுகில் சுமந்து வந்தார் மனைவி.

 உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவைச் சேர்ந்தவர் விமலா தேவி. இவரது கணவர் பதன் சிங், லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில மருத்துவ பிரச்சினைகள் காரணமாக அவரது இடது கால் அகற்றப்பட்டது. அதனால் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக தன் கணவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி அழைத்து வராமல் தன் முதுகில் சுமந்து வந்துள்ளார்.
 

காரணம் கெட்டவர்களிடம் விமலா கூறியது, "இந்த சான்றிதழ் வாங்குவதற்காக பல முறை பல அரசு அலுவலகங்களுக்கு நான் என் கணவருடன் இப்படித்தான் செல்கிறேன். மாற்றுத்திறனாளி சான்றிதழ் இருந்தால்தான் சக்கர நாற்காலி அளிப்பார்கள். இன்னும் எங்களுக்கு சான்றிதழே வழங்கவில்லை" என்றார்.
 

இந்த சம்பவம் குறித்து உத்திரபிரதேச உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆர். பூப்பந்த் சௌத்ரி கூறியது, "நாகரிக உலகத்தில் நடக்கும் ஒரு சோகமான சம்பவம் இது. இதை ஆய்வு செய்து அதன்படி உதவி செய்வோம்." 

சார்ந்த செய்திகள்