Skip to main content

தானாக நகர்ந்த சக்கர நாற்காலி... தெறித்து ஓடிய காவலாளி!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி தானாக நகரும் திகில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இரண்டு நாற்காலிகளுக்கு மத்தியில் இருந்த சக்கர நாற்காலி யாரோ பின்னோக்கி இழுப்பதுபோல முதலில் பின்னே நகர்கிறது. இதனை அடுத்து யாரோ ஒருவர் தள்ளிக்கொண்டு போவதுபோல முன்னோக்கி செல்கிறது.

 

gh



​​​​​​மேலும் சிறிய படிக்கட்டு போன்ற அமைப்பையும் தாண்டி செல்கிறது. சாலை வரை சென்ற சக்கர நாற்காலியின் பயணம் கடைசியாக அங்கு நின்றுள்ளது. இதனை இரவு பணியில் இருந்த காவலாளி அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தரை வழுவழுப்பாக இருந்ததாலும், மெல்லிய காற்று வீசியதாலும் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்