Skip to main content

வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் கைது

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

 Videocon Chairman Venugopal Arrested

 

வங்கியில் கடன் பெறுவதில் மோசடி செய்ததாக வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்கட்ட விசாரணையில் வீடியோகான் நிறுவன குழுமத்திற்கு 1,770 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கடன்கள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த 2009 ஜூன் மாதம் முதல் 2011 அக்டோபர் வரையில் வழங்கப்பட்ட இந்த கடன்களில் வங்கியினுடைய கொள்கை மீறப்பட்டதும் தெரியவந்தது.

 

இதனால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி சந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வங்கியில் கடன் பெறுவதில் மோசடி செய்ததாக வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபாலையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்