Skip to main content

35 யூடியூப் சேனல்களை முடக்க மத்திய அரசு உத்தரவு - காரணம் என்ன? 

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

ib ministry

 

நாட்டிற்கு எதிராக செய்திகளை பரப்பிய பல்வேறு யூடியூப் சேனல்கள், இணைய பக்கங்கள், சமூகவலைதள பக்கங்களை முடக்க மத்திய அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த தகவலை இன்று செய்தியாளர்களை சந்தித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விக்ரம் சஹயும், அந்த அமைச்சகத்தின் செயலாளருமான அபூர்வ சந்திராவும் வெளியிட்டுள்ளனர்.

 

செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் சஹயும், செயலாளருமான அபூர்வ சந்திராவும் கூறியதாவது; அமைச்சகம் பெற்ற புதிய உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், நேற்று 35 யூடியூப் சேனல்கள், 2 ட்விட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 2 இணையதளங்கள் மற்றும் ஒரு பேஸ்புக் கணக்கு ஆகியவற்றை முடக்க உத்தரவிட்டுள்ளோம்.

 

இந்தக் கணக்குகள் அனைத்திற்கும் பொதுவாக உள்ள விஷயங்கள் என்னவென்றால், பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதும், இந்தியாவுக்கு எதிரான போலியான செய்திகளையும், உள்ளடக்கத்தையும் பரப்புவதுமாகும். அந்த யூடியூப் சேனல்கள் 1.20 கோடி சந்தாதாரர்களையும், 130 கோடி பார்வை களையும் கொண்டிருந்தன . இப்போது கணக்குக்குகளை முடக்கும் செயல்முறை தொடங்கப்பட்டதால், இதுபோன்ற பல சேனல்கள் முடக்கப்படும் என நம்புகிறோம்.

 

 

சார்ந்த செய்திகள்