Skip to main content

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் "சென்னை மழை"!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள், விடுதிகள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன எனபது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஆறு மாதங்களுக்கு பின்னர் இன்று மாலை மழை பெய்துள்ளது. வெப்பம் தணிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

 

TWEETER TREND FOR TODAY CHENNAI RAINS

 

 

 

இந்த நிலையில் சென்னையில்  கிண்டி, ஆலந்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுத் தாங்கல், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஆறு மாதங்களுக்கு பின்னர் சென்னையில் மழை பெய்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெய்த மழை ட்விட்டரில் (TWEETER) "சென்னை மழை" (CHENNAI RAINS) என்ற பெயரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்