Skip to main content

கோடைக்கு மோர் கொடுக்கும் காவலர்கள்!!!

Published on 29/03/2018 | Edited on 29/03/2018


 

 traffic cops are being given two packets of buttermilk

ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் மக்கள் மீது அக்கறைகொண்டு  கோடைகாலத்தை சமாளிக்கும் வகையில், சிக்னலில் பொதுமக்கள் நிற்கும்பொழுது அவர்களே சென்று வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க ஒவ்வொருவருக்கும் இரண்டு மோர் பாக்கெட்டுகளை வழங்குகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து உயரதிகாரிகள் தெரிவித்தது, இந்த கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் மக்களுக்கு பணியில் உள்ள காவலர்களே சென்று இரண்டு மோர் பாக்கெட்டுகளை வழங்குகின்றனர். இந்த சேவையானது ஹைதராபாத் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீரின் தேவை என்பது இந்த கோடைகாலத்திற்கு மிகவும் அவசியம் என்பதால் மக்களிடம் சுகாதாரமான நீரை அதிகமாக எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திக்கிறோம். மேலும் மோர் பாக்கெட்டைத் தவிர குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில் போன்றவையும் தருகிறோம் என்றனர்.
 

சார்ந்த செய்திகள்