Skip to main content

கேரளாவில் 11ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Published on 03/09/2021 | Edited on 04/09/2021

 

;

 

கேரளாவில் கரோனா பாதிப்பு என்பது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருந்துவருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் தொடர்ந்து இருந்துவருகிறது. எப்போதும் குறைவாக இருக்கும் உயிரிழப்பு எண்ணிக்கையும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே கரோனா தீவிரமாக உள்ள நிலையில் அம்மாநில அரசு, வருகிற 6ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடிவு செய்திருந்தது.

 

கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும்போது தேர்வு நடத்துவதா? என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கான்வில்கர், ராய், ரவிக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கரோனா தொற்றைக் கணக்கில் கொண்டு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்தனர். அடுத்த கட்ட விசாரணையை வருகிற 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்