Skip to main content

சிஏஏ குறித்த மனுக்கள் மீதான விசாரணை... உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்...

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சட்டத்திற்கு எதிரான 144 மனுக்களின் மீதான விசாரணையில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

supreme court on caa issue

 

 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தொடரப்பட்டது. அப்படி தொடரப்பட்ட 144 மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சிஏஏ வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் அளித்து விசாரணையை 5 வாரத்திற்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். மேலும் இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்