தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு வரும் ஜூன் 10- ஆம் தேதி அன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆர்.எஸ். பாரதி. டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் 29- ல் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்சி வாரியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தி.மு.க.வுக்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் உறுதியாகியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் குடியரசுத்தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அ.தி.மு.க.வுக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் உறுதியாகியுள்ளன.