Skip to main content

காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு! திடீர் ஆலோசனையின் பின்னணி!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

sonia gandhi

 

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், காங்கிரஸ் மாநில குழுவின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 24 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில், மத்திய அரசின் தோல்விகளை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, மத்திய அரசு கரோனாவை கையாளும் விதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்த, இந்த கூட்டத்தில் திட்டம் வகுக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ஜூலை மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கூடவுள்ள நிலையில், சோனியா காந்தியின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்