Skip to main content

தோனி செய்தது தவறு! தோனி மீது சச்சின் அதிருப்தி!

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்கள் எடுத்தன. இதில் பேட்டிங்கில் இந்திய அணியின் இந்த தடுமாற்றத்திற்கு தோனி மற்றும் கேதர் ஜாதவின் மெதுவான  ஆட்டமே காரணம் என அனைவரும் விமர்சித்து வந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட்டின் ஜாம்பவானா  சச்சின் டெண்டுல்கரும் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பொறுமையான ஆட்டம் ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 

sachin



இந்த போட்டி குறித்து சச்சின்கூறும்போது, 'இந்திய அணி விளையாடிய விதம் எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. இந்திய வீரர்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக  விளையாடியிருக்க வேண்டும். இந்த போட்டியில் குறிப்பாக எம்எஸ் தோனி -கேதர் ஜாதவ் ஜோடி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர்கள் இருவரும் மிகவும் மந்தமாக விளையாடினார்கள். இதனால் இந்திய அணி அதிக ரன்களை குவிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்தார். இந்திய ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போராடி வென்றது குறிப்படத்தக்கது.

சார்ந்த செய்திகள்